க்ரைம்

வரதட்சணை கொடுத்தும் வரதட்சணை கொடுமை : இளம்பெண் தற்கொலை!!

100 பவுன் நகை கார் கொடுத்தும் கோவையில் வரதட்சனை கொடுமை இளம்பெண் தற்கொலை

திருப்பூர் பிஎன் ரோடு நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் அண்ணாதுரை நாற்பத்தி ஏழு இவரது மகள் இலக்கியா (27) இலக்கியாவிற்க்கும் கோவை ராமநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் ராம்பிரகாஷ் என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. ராம்பிரகாஷ் தனியாக போட்டோ சூட் எடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். திருமணத்தின் போது 100 பவுன் நகை வெள்ளி பொருட்கள் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு ராம் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தார் தொடர்ந்து இலக்கியாவிடம் பணம் மற்றும் நகை வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து அண்ணாதுரை தேவைப்படும் பொழுது பணம் மற்றும் நகைகளை கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையே வேறு ஒரு கார் வேண்டும் என ராம்பிரகாஷ் இலக்கியாவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து இலக்கியா தனது தந்தையிடம் 5 லட்ச ரூபாயை வாங்கி கொடுத்துள்ளார். மேலும் மாத தவணையாக முப்பதாயிரம் ரூபாயை அண்ணாதுரை செலுத்தி வந்தார் .இதற்கிடையே டூவீலர் வேண்டும் என்ற ராம்பிரகாஷ் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாதுரை ஒரு லட்ச ரூபாய் கொடுத்து புதிய டூவீலர் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து ராம்பிரகாஷ் குடும்பத்தார் இலக்கியாவை கொடுமைப்படுத்த கடந்த மார்ச் மாதம் திருப்பூருக்கு தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அண்ணாதுரை மாப்பிள்ளை வீட்டில் சமாதானம் பேசி கோவைக்கு அழைத்து வந்து விட்டு விட்டுச் சென்றார் .ஆனால் மறுநாளே மீண்டும் இலக்கியாவை வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்தினர் .இதையடுத்து இலக்கியா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவரது கணவர ராம்பிரகாஷ் மனைவியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். இதன் பின்னர் பல இடங்களில் தேடி இலக்கியா வை கண்டுபிடித்தனர். பின்னர் இலக்கியாவை அழைத்து வந்து மாப்பிள்ளை வீட்டாரிடம் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அண்ணாதுரை சேர்ந்து வாழச் செய்தார்.

இதையடுத்து ராம்பிரகாஷ் குடும்பத்தார் இலக்கியாவின் வீட்டிலிருந்து யாரும் வரக் கூடாது பேசக்கூடாது என்று கண்டிஷன் செய்தனர். அதையும் அண்ணாதுரை குடும்பத்தார் கேட்டுக்கொண்டனர். கடந்த மூன்று மாதங்களாக அண்ணாதுரை தனது மகளை பார்ப்பதற்கு பலமுறை முயற்சி செய்தும் ராம்பிரகாஷ் குடும்பத்தார் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் நேற்று மதியம் அண்ணாதுரை ராம்பிரகாஷ் தந்தை சரவணனுக்கு போன் செய்து உள்ளார் .பலமுறை அழைத்தும் போன் எடுக்காமல் இருந்த சரவணன் பின்னர் போனை எடுத்துள்ளார் .அப்போது அண்ணாதுரை திருப்பூரில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட மகள் மற்றும் மரு மகனைை அனுப்பிி வைக்கும்படி கேட்டுள்ளார் .அதற்கு மாமனார் சரவணன் யாரையும் அனுப்பி வைக்க முடியாது என்று செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார் .சிறிது நேரம் கழித்து மாமனார் சரவணன் அண்ணாதுரைக்கு போன் செய்து உங்கள் மகள் தூக்கில் தொங்கி விட்டாள் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து திருப்பூரிலிரந்து பதட்டத்துடன் அண்ணாதுரை புறப்பட்டு மகள் வீட்டிற்கு வந்தார். அவர் வந்து பார்த்த பொழுதுுமகள் இலக்கியா வீட்டில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்த அண்ணாதுரை மற்றும் அவரது குடும்பத்தார் கதறி அழுதனர். மேலும் இலக்கியாவின் உதட்டில் காயம் ஏற்பட்டு இருந்ததை அண்ணாதுரை பார்த்தார். இதையடுத்து அண்ணாதுரை தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளது என்றும் இறப்பிற்கு காரணமான மருமகன் ராம்பிரகாஷ் அவரது தந்தை சரவணன் மற்றும் தாயார் ஜெயந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார். 100 பவுன் நகை கார் என வரதட்சணை அள்ளிக் கொடுத்தும் மேலும் பணம் கேட்டு கொடுமைப்படுத்திய சூழலில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #crime #வரதட்சணைகொடுமை #கோவை #kovai

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button