செய்திகள்

ஏர் இந்தியா கடனை அடைக்க டாடா நிறுவனத்திற்கு உதவுகிறதா SBI ??

டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியாவை ரூ.18,000 கோடிக்கு விற்றதாக மத்திய அரசு அறிவித்தது. ஏற்கெனவே விஸ்தாரா, ஏர் ஏசியா என்று இரண்டு விமான நிறுவனங்களை வைத்திருக்கும் டாடாவுக்கு இது முன்றாவது நிறுவனம்.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட ரூ.70,000 கடன் இருந்ததால்தான், அந்நிறுவனத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்கும் பணிகளுக்காக டாடா நிறுவனம் வங்கியில் ரூ. 15,000 கோடி கடன் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை மீண்டும் தன்வசப்படுத்தியது டாடா. கடந்த 2017ம் ஆண்டு முதல் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டது. இந்நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மத்திய அரசு ஏந் இந்தியாவை டாடாவுக்கு விற்பனை செய்தது.

ஏர் இந்தியாவை சீரமைக்க டாடா நிறுவனம், வங்கியில் கடன் வாங்க உள்ளது. வெளிநாடு வங்கிகள் டாடாவுக்கு கடன் தர ஆர்வம் காட்டாதபட்சத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி கடன் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், ஸ்டாண்டர்டு சார்டர்ட், சிட்டி, டட்ஸே, ஜேபி மோர்கன், பார்க்ளேஸ் போன்ற வங்கிகள் டாடா நிறுவனத்தோடு பேச்சு வார்த்தையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து டாடா நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேசுகையில், ‘ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் முழுவதுமாக கைப்பற்றிவிட்டது. எனினும், சில விதிமுறைகளை முழுமையாக முடித்து கொள்ள சில மாத அவகாசம் தேவைப்படுகின்றது. இதனால், இன்னும் சில நாட்களுக்குப் பிறகே இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்க முடியும்’ என தெரிவித்துள்ளார்.

டாடாவுக்கு ஏர் இந்தியா திரும்ப வந்தது எப்படி?

ஜேஆர்டி டாடாதான் விமான நிறுவனங்களை நிறுவி 1932-ல் இந்திய விமான சேவையை துவக்கி முதல் விமானத்தை இயக்கினார். முதலில், டாட்டா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. 1953-ம் ஆண்டில், இந்திய அரசு ஏர் கார்ப்பரேஷன்ஸ் சட்டத்தை நிறைவேற்றியது, டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்து பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.

1994 ஆண்டு வரை நாட்டின் ஒரே விமான நிறுவனமாக ஏர் இந்தியா இருந்தது. அதன்பின்னர் தாராளமயமாக்கல் கொள்கையால் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதுவரை, லாபத்தில்தான் இயங்கி வந்த நிறுவனம், தனியார் விமான நிறுவனங்களின் போட்டி, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பு, அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகப்படியான சலுகைகள் போன்றவற்றின் காரணமாக இழப்பை சந்தித்தது. முதல் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் முதல், இரண்டாவமு இடத்தைப் பிடித்தன. இந்த நிலையில் நிறுவனம் ரூ.52 ஆயிரம் கோடி நஷ்டத்திலும். ரூ.55 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் கடனிலும் உள்ளதால், ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்ததாக கூறப்பட்டது. அதன்படியே தற்போது ஏர் இந்தியா, டாடாவுக்கு கை மாறியுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #airindia #TATA #SBI #ஏர்இந்தியா #டாடா #எஸ்பிஐ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button