செய்திகள்
Trending

மதுபிரியர்களுக்கு வச்சாங்க ஆப்பு!! 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் மது விற்பனை!!

நாமக்கல் மாவட்டத்தில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது அலை வருவதற்குள் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட திட்டமிட்டுள்ள தமிழக அரசு, தொடர்ச்சியாக 5 வாரமாக மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து லட்சக் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்திவருகிறது. வரும் வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள கட்டாயப்படுத்தி வருகின்றன. குறிப்பாக சில்லறை வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மதுக்கடையில் மது வாங்க செல்பவர்களும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் ஒரு படி மேல் சென்று 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை என்று அறிவித்துள்ளது. மதுபிரியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புப் பலகையை அனைத்து டாஸ்மாக் கடைகளின் வாயில்களிலும் அதிகாரிகள் வைத்துள்ளனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கொரோனாதடுப்பூசி #டாஸ்மார்க்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button