தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (13ம் தேதி) காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், சுகாதாரத் துறை, வருவாய் நிர்வாகத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழகத்தில் அக்டோபர் 20ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி கோயில்களை திறப்பது, பண்டிகைகளை ஒட்டி கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கோவில்திறப்பு #தமிழகமுதல்வர் #முகஸ்டாலின் #ஊரடங்குதளர்வுகள்