தா.சே. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் அவரது 39வது படத்துக்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டார். ஜெய் பீம் திரைப்படம், நவம்பர் 2-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் செல்லாத இத்திரைப்படம், ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.
மேலும், படம் குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா, ‘உண்மையை உரக்க சொன்னால் மட்டுமே உண்மையான மாற்றம் நிகழும்… மகிழ்விப்பதைக் காட்டிலும், உணர்வு பூர்வமாய் உண்மையின் பக்கம் நின்ற மனநிறைவை தரும் ஜெய் பீம்!!’ என தெரிவித்துள்ளார்.
https://twitter.com/Suriya_offl/status/1448930307248308224?t=3qyy4OgQ8GVP8AeHCUG1cw&s=19
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலின பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிடுவதாக சூர்யா நடித்திருக்கிறார். ‘பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு அநீதியைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தும்’ ‘திருடன் இல்லாத ஜாதி இருக்கா, எல்லா ஜாதியிலும் பெரிய பெரிய திருடங்க இருக்காங்க’ என வலிமையான வசனங்கள் டீசரில் வெளியாகியுள்ளது.
கதிர் படத்தின் ஒளிப்பதிவாளர், ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், ரஜீஷா விஜயன், லிஜோ மோல் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி எதிர்ப்பார்பை கிளப்பிய நிலையில், இப்போது டீசர் வெளியாகியுள்ளது.