விளையாட்டு

சிங்கமே வென்றது…! 4வது முறையாக கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே..! குவியும் பாராட்டுக்கள்

14-வது ஐ.பி.எல். சீசனின் 2-வது கட்ட லீக் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

துபாயில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின, இதில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 59 பந்தில் 7 பவுண்டரி 3 சிக்ஸர் உள்பட 86 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் அட்டமிழந்தார் ஆனார், மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சுனில் நரைன் 2 விக்கெட் வீழ்த்தினார்.



இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 32 பந்தில் 6 பவுண்டரி 3 பவுண்டரி உள்பட 50 ரன் எடுத்து அட்டமிழந்தார். நிதிஷ் ரானா ரன் ஏதும் எடுக்காமல் அட்டமிழந்தார். சுனில் நரேன் 2 ரன்னில் வெளியேறினார். ஷுப்மான் கில் 43 பந்தில் 6 பவுண்டரி உள்பட 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து அடுத்து விக்கெட் சரிந்தது. இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று 4வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், ஹேசில்வுட், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


நான்காவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட சென்னை அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/IPL/status/1449119901365329921?t=Py-Jh5Xy7gmvmXegZgmhXQ&s=19



தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில்,” சென்னை அணியின் சிறப்பான ஆட்டம். சிங்கம் மீண்டும் கர்ஜித்தது. நான்காவது முறையாக ஐபிஎல் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்ட சென்னை அணியின் ஒவ்வொரு வீரர்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அதன் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டன் மகேந்திர சிங் தோனியை அன்புடன் வரவேற்க சென்னை காத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

https://twitter.com/mkstalin/status/1449078251268108291?t=sxKVRzzls_D0fTh7giIigA&s=19


தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் பி.சேகர்பாபு தனது ட்விட்டர் பதிவில், ” மீண்டு வருவது – இதுதான் சென்னையின் வழக்கம்” என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பதிவின் மூலம் சென்னை அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

https://twitter.com/ashwinravi99/status/1449068959760883719?t=fLolsh0Z5-NVK6HjpxiLEg&s=19


இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரும், டெல்லி அணியின் வீரருமான ரவிச்சந்திர அஷ்வின் தனது ட்விட்டர் பதிவில், ” நான்காவது முறையாக கோப்பையைத் தக்க வைத்துக் கொண்ட சென்னை அணிக்கும், எம்.எஸ் தோனிக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஐபிஎல் தொடரில் விளையாடிய கொல்கத்தா அணியிடம் புதிதாக நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

https://twitter.com/ashwinravi99/status/1449068959760883719?t=fLolsh0Z5-NVK6HjpxiLEg&s=19

நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் , முழங்கால் இரத்தப்போக்குடன் ஷேன் வாட்சனின் இன்னிங்ஸை நினைவில் கொள்கிறேன் !! FAF, கெய்க்வாட், உத்தப்பா, ஜடேஜா மற்றும் இறுதியாக ஒரே ஒரு தல தோனிக்கு …….🥳🥳🥳🥳💥💥💥💥👑👑👑 #CHAMPIONS

https://twitter.com/dhanushkraja/status/1449072505365274635?t=ZDVl4oLBzqWMGeNUMbb11Q&s=19


https://twitter.com/WasimJaffer14/status/1449072711615975428?t=vr3AFM4-93Tdn75ZUBTUDQ&s=19


https://twitter.com/varusarath5/status/1449093099767009281?t=tmmKGhw4vBlM6v9w4kL8VQ&s=19


https://twitter.com/skpkaruna/status/1449072986191921152?t=EogarI8MbOw72g2WDuga2w&s=19


https://twitter.com/s_badrinath/status/1449065940646174720?t=0S5TWKjEq-wUNArMcubVtA&s=19

நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பதிவில், “ஐபிஎல் போட்டித் தொடரில் வெற்றியடைய அதிகப்படியான விளையாட்டு பிரக்ஞை (விழிப்புணர்வு) தேவைப்பக்டுகிறது. தமிழ்நாட்டின் இதயத்துடிப்பாக விளங்கும் அந்த ஜார்கண்ட் மனிதனுக்கு இந்த பிரக்ஞை ஏராளமாக உள்ளது. அனுபவமும், பணிவும் இருந்தால் வயது தடையாக இருக்காது என்பதை நிரூபித்ததிற்கு நன்றி! சிஎஸ்கே” என்று பதிவிட்டார்.

https://twitter.com/ActorMadhavan/status/1449093315786428419?t=s0fgkB1hsXWxGV7VbuEdSg&s=19

இப்போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு 12 கோடி ரூபாயும், தோல்வியடையும் அணிக்கு 6 கோடி ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button