தொழில்நுட்பம்

சோனட் காரின் SPECIAL EDITION ஐ அறிமுகம் செய்த கியா- வேற லெவல் லுக்..

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான தென் கொரியாவின் கியா கார் நிறுவனம், விற்பனை சக்கைபோடு போட்டுக்கொண்டு இருக்கிறது.

குறிப்பாக கியா நிறுவனத்தின் சோனட் காரை சென்னையின் எல்லா சாலைகளிலும் காண முடியும், அளவுக்கு அறிமுகமான சில ஆண்டுகளிலேயே பிரமாண்ட வெற்றியை பெற்று உள்ளது. 5 சீட்டர்களை கொண்ட மினி SUV ரக காரான சோனட் அதன் கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் ஒப்பீட்டு அளவில் நியாயமான விலையில் கிடைப்பதால் பலரும் அதை விரும்பி வாங்கினர். சோனட் காரின் சஸ்பென்சனில் பிரச்சனை இருப்பதாக விமர்சனங்கள் இருந்தாலும், அதன் விற்பனை குறைந்தபாடு இல்லை.


இந்த நிலையில் இந்தியாவில் சோனட் காரை அறிமுகம் செய்து ஓராண்டு கடந்து உள்ளது. சோனட் காரின் முதலாவது ஆண்டு விழாவை கொண்டாடி வரும் கியா நிறுவனம், அதை முன்னிட்டு புலியின் மூக்கு போன்ற கிரில் வடிவமைப்புடன் கூடிய சிறப்பு சோனட் காரை அறிமுகம் செய்து இருக்கிறது. வழக்கமான சோனட் கார்களை காட்டிலும் இந்த சிறப்பு சோனட் காரில் வடிவமைப்பு மேம்படுத்தாப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கிட் ப்ளேட்டுகள், பக்கவாட்டு கதவில் புதிய அலங்காரங்கள், ஆரஞ்சு நிற வேலைப்பாடுகளுடான பார்க்க புத்துணர்ச்சியாக உள்ளது கியாவின் சிறப்பு சோனட் காரின் வடிவமைப்பு. இந்த கார் 4 வகையான எஞ்சின் வகைகளுடன் விற்பனைக்கு வர இருக்கிறது.


பெட்ரோல் எஞ்சின்: 1.0 T-GDi with Smartstream 6speed iMT clutchless manual, 7speed DCT automatic.


டீசல் எஞ்சின்: 1.5-litre CRDi 6speed MT, 6speed AT torque

அதே போல் அரோரா பிளாக் பேர்ல், கிளேசியர் வொயிட் பேர்ல், ஸ்டீல் சில்வர், கிராவிட்டி கிரே ஆகிய 4 வகையான நிறங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வர உள்ளது. இந்த சிறப்பு சோனட் கார் குறைந்த அளவிலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கியா நிறுவனம் அறிவித்து உள்ளது. கியாவின் வழக்கமான சோனட் காரை விட இந்த சிறப்பு சோனட் காரை வாங்க பிரீமியம் தொகை கூடுதலாக ரூ.40 ஆயிரம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இதை நீங்கள் வாங்கலாம்.

விலை



ஆனால், இதில் பயன்படுத்தப்பட்டு உள்ள உதிரி பாகங்கள், கேஜட்டுகள் குறித்த எந்த தகவலையும் கியா வழங்கவில்லை.

இந்தியாவில் தற்போது செல்டாஸ், சோனட், கார்னிவல் ஆகிய கார்களை தயாரித்து விற்பனை செய்து வரும் கியா நிறுவனம், வரும் ஆண்டில் மேலும் ஒரு புதிய காரை அறிமுகம் செய்ய உள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #Topcars #Cars #Kia_Sonet #Sonet_New_Model

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button