சினிமாசெய்திகள்
Trending

அனிருத்தின் காதலர் இவர் தானா?? சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் புகைப்படம்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தும், மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனும் காதலிப்பதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.

அனிருத் இரு தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் மாஸ்டர் பட ஹீரோயின் மாளவிகா மோகனன் ட்விட்டரில் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சோஷியல் மீடியா முழுவதும் அதுவே ட்ரெண்ட் ஆனது. அந்த புகைப்படத்தை பார்த்தவர்களோ, அனிருத்தின் லேட்டஸ்ட் காதலி மாளவிகா மோகனன் தான் என்று பேசத் துவங்கிவிட்டனர்.

கடந்த ஆண்டு அனிருத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கீர்த்தி சுரேஷ் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அனிருத்தும், கீர்த்தியும் நெருக்கமாக இருந்த அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகளோ அவர்கள் காதலர்கள் என்றார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு மாளவிகாவை காதலியாக்கிவிட்டார்கள். மேலும் சிலர், மாளவிகா தன் வலது கையை பின்னால் வைத்திருப்பதை பார்த்து கையில் சரக்கு பாட்டிலா இருக்குமோ என்று கிளப்பிவிட்டுள்ளனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமா #அனிரூத் #மாளவிகா

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button