முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடக்கும் நிலையில் அவரின் மனைவி ரம்யா, அவரது மூத்த மகள் ஆகியோருக்கு கொரோனா இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு முன்னாள் அதிமுக அமைச்சர்களாக குறி வைத்து அடுத்தடுத்து ரெய்டு நடத்தி வருகிறார்கள். எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, கேசி வீரமணி ஆகியோர் வரிசையில் தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் ரெய்டு நடந்து வருகிறது
ஒரு இடம், இரண்டு இடம் என்று இல்லாமல் தமிழ்நாடு முழுக்க 43 இடங்களில் ரெய்டு நடக்கிறது. சென்னையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், புதுக்கோட்டையில் உள்ள வீடு, அங்கு இருக்கும் அலுவலகம், தம்பி, தங்கை வீடுகள், கோவையில் இருக்கும் மாமனார் வீடு என்று பல இடங்களில் ரெய்டு தீவிரமாக நடந்து வருகிறது.
அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து சொத்து சேர்ததாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. லஞ்ச பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி முறைகேடாக கல்லூரி கட்டியதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு சொந்தமான 14 கல்வி நிறுவனங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. முறைகேடாக அறக்கட்டளை மூலம் வரி ஏய்ப்பு செய்ததாக இந்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .
விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடக்கும் நிலையில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, அவரது மூத்த மகள் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுவதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு கொரோனா இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தோம். அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் தற்போது கவச உடைகளுடன் சோதனையிலும், விசாரணையிலும் ஈடுப்பட்டு வருகிறார்கள் என்று அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். அதிமுக தரப்பில் பலர் இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா இருக்கும் நிலையில் இப்படி விசாரணை நடத்துவது தவறு. அவர்களை ஓய்வு எடுக்க அனுமதிக்க வேண்டும். இது அதிகார அத்துமீறல் என்று விமர்சனங்கள் வைத்து உள்ளனர்.
ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்போ, விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவிற்கு கொரோனா குணமாகிவிட்டது. அவருக்கு கொரோனா வந்துவிட்டு சென்றது. அவர்களின் மூத்த மகளுக்கும் இன்றோடு குவாரன்டைன் முடிகிறது. இதனால் அத்துமீறல் எதுவும் நடக்கவில்லை.
விதிப்படிதான் விசாரணை செய்கிறோம். இருப்பினும் பாதுகாப்பு காரணங்களுக்காக கவுச உடை அணிந்து சோதனை மற்றும் விசாரணைகளில் ஈடுப்பட்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தொந்தரவு எதையும் செய்யவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா ஏ2 ஆக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #விஜயபாஸ்கர் #லஞ்சஒழிப்புதுறை #கொரோனா