செய்திகள்டிரெண்டிங்
Trending

என்னடா இது! பகல் கொள்ளையா இருக்கு!! பெட்ரோல்னு சொல்லி குடுத்திங்க!! தண்ணீ தான் இருக்கு..!!!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வி. எம். எஸ் என்கின்ற பெயரில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.

இந்த எரிபொருள் நிலையத்தில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பி செல்கின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய பல வாகனங்கள் தொடர்ந்து பழுதாகி உள்ளது.

தொடர்ந்து வாகனங்கள் பழுதானதால் அதற்கான காரணம் என்ன வென்று தெரியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வந்தனர். இந்த நிலையில் சிலர் வாகனங்களை மெக்கானிக் கடைகளில் பழுதை சரி பார்க்க அணுகியுள்ளனர், அப்பொழுது அதனை பரிசோதனை செய்த மெக்கானிக் கூறுகையில் கலப்படம் செய்த பெட்ரோலின் காரணமாகத் தான் இந்த வாகனம் பழுதானது என தெரிவித்தார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்கில் முறையிட்டனர், அப்போது ஊழியர்கள் சரியாக முறையில் பதிலளிக்காமல், ஒருமையில் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

பெட்ரோலை இரண்டு கேன்களில் வாங்கி பரிசோதனை செய்ததில் பெட்ரோல் பாதி அளவும் நீரும் பாதி அளவும் காண்பித்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி வாகன ஓட்டிகளுக்கு இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், தற்போது கலப்பட பெட்ரோல் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் மீது அரசு கடும் நவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் 103.01 ரூபாய், டீசல் லிட்டர் 98.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பெட்ரோல் #டீசல் #தண்ணீர்_பெட்ரோல்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button