செய்திகள்டிரெண்டிங்

எங்கள இந்தி கத்துக்க சொல்ல‌ நீங்க யாரு ?? சோமோட்டோவின் பேச்சு ! கொந்தளித்தது தமிழ்நாடு !!

விகாஷ் என்னும் வாடிக்கையாளர் சோமாட்டோவில் சிக்கன் ரைஸ் காம்போ ஆர்டர் செய்துள்ளார். அதில் சிக்கன் ரைஸும் பெப்பர் சிக்கனும் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் வீட்டுக்கு சிக்கன் ரைஸ் மட்டுமே டெலிவரி செய்யப்பட்டது. பெப்பர் சிக்கன் வரவில்லை. வாடிக்கையாளார் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டு, டெலிவரி செய்யப்படாத உணவுக்கான பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஹோட்டலில் தொடர்பு கொண்டு கேட்டதாகவும் அவர்கள் சோமாட்டோ சேவை மையத்தை தொடர்பு கொள்ளுமாறு கூறியதையும் சாட் மூலம் தெரிவித்துள்ளார் விகாஷ். ஹோட்டலுக்கு 5 தடவை தொடர்பு கொண்டு கேட்டதாகவும் தமிழ் மொழி தெரியாததால் எந்த பதிலையும் பெற முடியவில்லை என்று கூறிய சேவை மையப் பணியாளர் அடுத்து கூறியது தான் விகாஷை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“உங்கள் பணிவான கவனத்திற்கு, இந்தியாவின் தேசிய மொழி இந்தி. எனவே, எல்லோருக்கும் கொஞ்சமாவது இந்தி தெரிந்து இருக்க வேண்டும் என்பது இயல்பானது” என்று ஒரே போடாகப் போட்டுள்ளார் அந்தப் பணியாளார். அதாவது தமிழ்நாட்டில் ஹோட்டல் நடத்துபவர்களுக்கும், சோமாட்டோவில் ஆர்டர் செய்பவர்களுக்கும் இந்தி தெரிந்து இருக்க வேண்டுமாம். இல்லையென்றால் இப்படித்தான் பிரச்சனை ஏற்படும் என்ற ரீதியில் அவருடைய பதில் இருந்துள்ளது.


இந்த சாட் மெசேஜை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விகாஷ். அதைத் தொடர்ந்து பலரும் அதை ரிட்வீட் செய்ததுடன் சோமாட்டோ நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய வேண்டுமென்றால் அந்த நிறுவனம் தான் தமிழ் மொழி தெரிந்த சேவைப் பணியாளர்களை பணியமர்த்த வேண்டுமேயன்றி, தமிழர்கள் இந்தி கற்க வேண்டியதில்லை என்று பதிவிட்டு வருகிறார்கள்.

இதனால் #Reject_Zomato என்ற டேக் தற்போது இணையம் முழுக்க டிரெண்டாகி வருகிறது. தற்போது விகாஷுக்கு பதில் அளித்துள்ள சோமேட்டோ நிறுவனம். ஹாய் விகாஷ். இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் இதை உடனே விசாரிக்கிறோம். உங்களுடைய மொபைல் நம்பரை தனிப்பட்ட மெசெஜில் அனுப்பினால் நன்றாக இருக்கும் என்று சோமேட்டோ நிறுவனம் அவரிடம் கேட்டுள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் ரிஜக்ட் சோமாட்டோ ட்ரெண்ட் ஆனதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நபர் நீக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், தமிழுக்கு தனி முக்கியத்துவம் தரப்போவதாகவும் சோமேட்டோ அறிவித்துள்ளது.

Vanakkam Vikash, we apologise for our customer care agent’s behaviour. Here’s our official statement on this incident. We hope you give us a chance to serve you better next time

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #Rejects_Zomoto #Zomoto

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button