உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் கொள்ளையன் ஒருவன் போலீஸை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கிரேட்டர் நொய்டா அருகே கோதி பச்சேடா என்ற பகுதியை சேர்ந்த சச்சின் ராவல் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு கார் விற்பனை மையத்தில் இருந்து மாருதி ஸ்விஃப்ட் டிசையர் காரை ஓட்டிப் பார்க்க எடுத்துச் சென்றார் .
அப்படி சென்றவர் மீண்டும் காரைக் கொண்டுவராமல் அப்படியே காரை கொள்ளையடித்துச் சென்றார்.
மேலும் தனது பக்கத்து வீட்டுக்காரரின் கார் நம்பரை தனது காருக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் சுராஜ்பூரில் போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, ராவல் சென்ற காரை, விரேந்தர சிங் என்ற போலீஸ்காரர் மறித்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது காரின் ஆவணங்களை கேட்டபோது, போனில் போலியாக தயாரித்து வைத்திருந்த ஆவணத்தைக் காட்டியுள்ளார்.
ஆனால் பேப்பர் ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என விரேந்தர் சிங் கூற, மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் விரேந்தர் சிங்கை காருக்குள் இழுத்துவிட்டு, காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
சுமார் 15 கி.மீ தூரம் சென்ற பிறகு ஓடும் காரில் இருந்து அவரை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனையடுத்து ராவல் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #உத்திரபிரதேசம்