செய்திகள்

டிசம்பர் 1 முதல் கேபிள் கட்டணம் உயர்வு!!

புதிய முறையில், வாடிக்கையாளர்களே தாங்கள் விரும்பும் சேனல்களை, தேர்வு செய்து கொள்ளலாம். இதில், சேனல் நிறுவனங்கள் தங்களின் சேனல்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை 19 ரூபாய் வரை நிர்ணயித்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதில், ஒரு சேனலின் அதிகபட்ச கட்டணம் 19 ரூபாயிலிருந்து 12 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மேலும் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது. இந்த திருத்தப்பட்ட கட்டணத்திற்கு, சேனல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

அதனால், குறிப்பிட்ட சேனல்கள் அடங்கிய தொகுப்பிற்கு தனிக் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளது. உதாரணமாக, ‘டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தொகுப்பு சேனல்களின் கட்டணம் 49 ரூபாயாக உள்ளது. இது, 69 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. இதேபோல, ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளன.

இல்லையெனில், பிரதான சேனல்களை தொகுப்பில் இருந்து மாற்ற உள்ளனர். அவ்வாறு மாற்றும்போது, அதற்கான கட்டணம் மாறும். இதனால், வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் கேபிள் கட்டணம் 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, அரசு கேபிள் மாத கட்டணமாக 130 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி. என 154 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கேபிள்டீவி_கட்டணம் #CableTV

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button