கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி, நடந்தது என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரப்பன் (45).
கூலித் தொழிலாளியான இவர் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர். இவர், நேற்று முன்தினம் (18ம் தேதி) ராயக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக அவரது மனைவி குண்டம்மாள் (35) ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், “எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. என்னிடம் மது குடிக்க பணம் கேட்டார். நான் கொடுக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், வேறு யாரிடமோ பணம் வாங்கி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் தவறி விழுந்து இறந்துள்ளார்” என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் ராயக்கோட்டை காவல் கண்கானிப்பாளர் சுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் மாரப்பன் உடலை பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாரப்பன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டத்தில், மாரப்பன் தலையில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து ராயக்கோட்டை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். முதல் கட்டமாக, மாரப்பனின்மனைவி குண்டம்மாளிடம் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது.
விசாரணையில் குண்டம்மாள் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில்:-
எனக்கும், மாரப்பனுக்கும் திருமணமாகி 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். எனது கணவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் குடித்து விட்டு வந்து என்னிடம் அடிக்கடி தகராறு செய்வார். இந்த நிலையில் எனக்கும், சஜ்ஜலப்பட்டியை சேர்ந்த விவசாயி சிவசங்கர் என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. சிவசங்கருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான். சிவசங்கர் என்னை அடிக்கடி தனிமையில் வந்து சந்திப்பார். இது எனது கணவருக்கு தெரிய வந்தது. அவர் என்னை பல முறை கண்டித்தார். இதனால் அவர் இருக்கும் வரையில் நாம் வாழ முடியாது என்று முடிவு எடுத்து. அவரை தீர்த்து விடலாம் என்று எனது கள்ளக்காதலனுக்கு ஐடியா நான் கொடுத்தேன்.
அதனையடுத்து நான் கொடுத்த திட்டத்தின்படி இரவு மது குடிப்பதற்காக வெளியே சென்ற எனது கணவரை, சிவசங்கர் அழைத்து சென்றார். அப்போது மது போதையில் இருந்தபோது எனது கணவரின் பின்புற மண்டையில் நான் இரும்பு கம்பியால் அடித்தேன். இதில் அவர் அங்கேயே கீழே விழுந்து உயிரிழந்தார் . இதையடுத்து தக்காளி மண்டி அருகில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நாங்கள் இருவரும் உடலை போட்டுவிட்டு அங்கு இருந்து தப்பித்துவிட்டோம்
இந்நிலையில் மறுநாள், காணாமல் போன எனது கணவரை தேடி நடித்ததாகவும், அதில் எனது கணவர் உடல் மதுக்கடை அருகில் கிடந்ததாக நானே காவல்துறையினரிடம் தெரிவித்தேன். என்னிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து விட்டு எனது கணவர் சென்றதாகவும், பின்னர் மது போதையில் கீழே விழுந்து இறந்ததாகவும், அனைவரையும் நம்ப வைத்தேன். ஆனால் எனது கணவரின் தலையில் இருந்த காயத்தை கொண்டு, அவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இறந்ததை காவல்துறையினர் எங்களை கண்டுபிடித்து விட்டனர்’ எனக் கூறியுள்ளார்.
குண்டம்மாள், தனது கள்ளக்காதலன் சிவசங்கர் என்பவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து குண்டம்மாளையும், சிவசங்கரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தகாத நட்புக்காக கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #crime #கிரைம் #கிருஷ்ணகிரி #Krishnagiri