சினிமா
Trending

ஆஸ்காருக்கு சென்ற யோகிபாபு…! ஆஸ்கார் பரிந்துரை பட்டியலில் மண்டேலா!!

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் யோகி பாபுவின் ‘மண்டேலா’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு – ஷீலா ராஜ்குமார் நடித்த ‘மண்டேலா’ கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்தது. நகைச்சுவை நடிகர்-ஹீரோ என பயணித்துவரும் யோகி பாபுவுக்கு காலத்திற்கும் பெருமைப்படக்கூடிய படமாக அமைந்தது ‘மண்டேலா’.

இந்நிலையில், ‘ மண்டேலா’ ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் உள்ள அனைத்து சினிமா விருதுக்கும் தலைசிறந்த விருதான ஆஸ்கார் விருது சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் அனுப்பவுள்ள படத்திற்காக தற்போது இந்தியாவிலிருந்து 14 படங்கள் தேர்வாகியுள்ளன.

மேலும் தேர்வு செய்யப்பட்ட 14 படங்களில் தமிழில் இருந்து தேர்வான ஒரே படம் ‘மண்டேலா’ என்பது குறிப்பிடத்தக்கது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமா #CinemaNews #சினிமாசெய்திகள் #மண்டேலா #யோகிபாபு #Yokibabu #தமிழ்சினிமா #TamilFilmIndustry #ஆஸ்கார்விருது #Oscar #OscarAward

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button