தனியார் மினிபஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் நிறுத்தத்தில் இறங்குவதற்கு முயற்சித்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது….
தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் தீப்பெட்டி ஆபீஸ் பின்புறமுள்ள காலனி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண் நேற்று தனது மகளின் திருமணத்திற்காக கழுகுமலையில் இருந்து பொருட்களை வாங்கிக்கொண்டு தனியார் மினி பஸ்சில் சொந்த ஊரான ராமலிங்கத்திற்கு பயணம் செய்த நிலையில் நிறுத்தத்தில் இறங்குவதற்கு முயற்சி செய்தபோது நிலைதடுமாறி பேருந்தின் முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அங்குள்ளவர்கள் விபத்தில் சிக்கிய மகேஸ்வரியை மீட்டு குருவிகுளம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்து நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார் மேலும் அவர் பேருந்தில் பயணம் கீழே விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன இதுகுறித்து குருவிகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #Sankarankovil #சங்கரன்கோவில்