செய்திகள்
Trending

கொத்தடிமை வன்கொடுமை : தூய்மை பணியாளர்கள் மாநகராட்சியில் முற்றுகை!!!

திண்டுக்கல் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை.

தூய்மைப் பணியாளர்களின் கொத்தடிமை முறையில் நியமனம் செய்வதை கண்டித்து திண்டுக்கல்லில் மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சியில் நிரந்தர மற்றும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை கொத்தடிமை முறையில் பணி அமர்த்தப்படுகின்றனர். பணி சுமை வழங்கி வன்கொடுமை செய்து வரும் மாநகராட்சி நிர்வாக மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி இட மாற்றம் செய்து கொத்தடிமை ஒழிப்பு தீண்டாமை வன்கொடுமையிலிருந்து பாதுகாக்க வேண்டும். தனியார் ஒப்பந்த தூய்மைபணியாளர் களுக்கு தமிழக முழுவதும் ஒரே ஊதியமாக ரூ.700/ நிர்னையம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்ட ஏழை சமூகமான அருந்ததியர் நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு திண்டுக்கல் மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் மூலம் கடன் வழங்கப்படுத்தி தரவேண்டும். மாநகராட்சி மூலம் ஊதியத்தில் பிடித்தம் செய்த ரூ. 2 கோடிக்கு மேல் மாநகராட்சி நிர்வாகம் கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தாமல் உள்ளது. பணம் கட்டி முடிக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் கடன் பெற முடியாத நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக கூட்டுறவு மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதத்திலிருந்து மாநகராட்சி நிர்வாகம் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யாமல் நேரடியாக பணம் செலுத்துவதற்கு உத்திரவிட வேண்டும். சிக்கன நாணய சங்கம் செயல்படாமல் இருந்து வருகிறது. அது செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் காளிராஜ் தலைமையில் துப்பு மி பணியாளர்கள் முற்றுகையில் ஈடுபட்டு பின்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்திகள் : ரியாஸ் கான், திண்டுக்கல்

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திண்டுக்கல் #தூய்மைபணியாளர்கள் #கொத்தடிமை #கீழ்த்தர_மக்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button