கரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய ஊராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் ஏற்பட்ட மோதல் காரணமாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று தமிழகம் முழுவதும் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாவட்ட குழு தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போட்டியின்றி பலர் தேர்வு செய்யப்பட்டாலும், இதில் திமுக வேட்பாளர் தங்களுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு பல இடங்களில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் மாவட்ட துணைத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டதால், முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தும் உதவி அலுவலரை மறைத்த அதிமுகவினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், காரணமின்றி தேர்தலை நிறுத்தியதாக சாலையில் அமர்ந்து போராடிய விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் 50 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசியல்செய்திகள் #அதிமுக #விஜயபாஸ்கர் #ADMK #VijayaBaskar #TamilNadu