அரசியல்
Trending

“தேர்தல் வைத்துதான் துரை வைகோவுக்கு பதவி வழங்கப்பட்டது: தப்பு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…” வைகோ பேச்சு

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி

துரை வைகோ தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாக்கெடுப்பு ஓட்டு பெட்டி வைத்து 106 பேர் கலந்து கொண்டதில் 104 பேர் வாக்களித்தனர்.’ பொதுச்செயலாளர் என்ற முறையில் நேரடியாகவே நியமனம் செய்யலாம்.ஆனால்முறைப்படி தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் . எந்தக் கட்சியிலும் இல்லாதது மதிமுகவில் தான் நடைபெற்றது கட்சித் தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை வைகோ பங்கேற்றுள்ளார். அவற்றை மாவட்ட செயலாளர்கள் வரவேற்று அவருக்கு உரிய பதவி அளிக்க வேண்டும் என கூறியதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது தனிப்பட்ட முறையில் துரைவைகோ அரசியலுக்கு வருவது எனக்கு விருப்பமில்லை. ஆனாலும் துரை வைகோவுக்கு அரசியலுக்கு வருவது கட்சியினர் வரவேற்பு அளித்துள்ளனர். சில நாளிதழ்களில் விமர்சனங்கள் செய்கின்றன. விமர்சனங்கள் அரசியலில் வருவது சகஜம் ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சனம் செய்து வருகின்றனர் சில பேர் கட்சியை விட்டு செல்வதால் கட்சி பிளவுபடும் என்ற நோக்கம் அல்ல .தொடர்ந்து கட்சி வலுவாக தான் உள்ளது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியாத சிலர் வாட்ஸ்அப் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் துரை வைகோவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் உத்திரப்பிரதேச விமான நிலையத்திற்கு ராஜபக்சே வருவதை நாங்கள் எதிர்க்கிறோம் தற்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் நேரடியாக செல்ல முடியவில்லை இல்லையேல் கடந்தமுறை சாஞ்சியில் நடைபெற்றது போல் 1500 பேருடன் சென்று எதிர்ப்பு தெரிவிப்போம் வரும் 1ஆம் தேதி லண்டனுக்கு செல் லும் கோத்தபய ராஜபக்சேவை எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தமிழர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து சோதனை நடைபெறுவது குறித்த கேள்விக்கு தவறு செய்தவர்கள்தண்டிக்கப்பட வேண்டும் என வைகோகூறினார்.

செய்திகள் : பா.நீதிராஜன், மதுரை

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வைகோ #Vaiko #அரசியல்செய்திகள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button