செய்திகள்
Trending

பழனியில் குட்டி இராமானுஜர் : அசர வைக்கும் திறன்!!

பழனியில் கால்குலேட்டரை மிஞ்சும் மனக் கணித வேகத்திறன் கொண்ட 7 வயது சிறுவன் அனைவரையும் வியக்கவைத்துள்ளான்.

பழனி அருகே நெய்க்காரபட்டியைச் சேர்ந்த தம்பதியினர் கணேசன் மற்றும் பிரதீபா. இருவரும் அரசுப்பள்ளியில் கணித ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாவது மகன் அபினவ் பிரதீப்.
ஏழு வயதுடைய இச்சிறுவன் சிறுவயது முதலே எவ்வித பயிற்சியும் இன்றி கணிதத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளான்.
அச்சிறுவனை கண்டு ஆச்சிரியமடைந்த பெற்றோர் நாளடைவில் இச்சிறுவன் ஒன்று முதல் ஆயிரம் வரையிலான கணித வாய்ப்பாடுகளை தங்குதடையின்றி கூறியது மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும் முழு எண்கள், தசம எண்கள், முழுக்கள் ஆகியவற்றில் எவ்வித பெரிய எண்களாக இருந்தாலும் கேட்கப்படும் கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் உள்ளிட்ட கணக்குகளுக்கு எவ்வித தங்குதடையின்றி கால்குலேட்டர் வேகத்தை மிஞ்சும் வகையில் பதில் அளிக்கிறான்.
வர்க்கம், வர்க்கமூலம், கணம், கணமூலம் ஆகியவற்றை கணக்கிட்டு கூறி அதில் சில சூத்திரங்களையும் கண்டுபிடித்துள்ளான்.
கால அளவுகளை கணக்கிடுதல், நேரியல் சமன்பாடுகளை தீர்ப்பதிலும் ஆற்றல் பெற்றுள்ளான். ராமானுஜம் எண்களை வரிசையாக கூறி அசத்தும் இச்சிறுவன் மனிதக் கணினி என்று அழைக்கப்படும் சகுந்தலாதேவி அம்மையாரை போல் இச்சிறுவன் திறமை பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதி மக்கள் இச்சிறுவனை குட்டி ராமானுஜர் என செல்லமாக அழைக்கின்றனர்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பழனி #குட்டிஇராமானுஜன் #மனக்கணிதம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button