சசிகலா அதிமுக இணைவாரா?? ஓபிஎஸ்ஸின் அதிர்ச்சி தகவல் !!
அதிமுகவில் எப்போதும் சர்ச்சைகளும் குழப்பங்களும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. இவையெல்லாம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் தொடங்கியது இந்த குழப்பங்களும் சர்ச்சைகளும் தற்போதும் நீடிக்கிறது. இதனால் அதிமுகவில் பலரும் அதிருப்தி அடைந்து காணப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலா, ஆட்சி பொறுப்பை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கிச்சென்றார். ஆனால் அவர் சிறை சென்றபின்னர் காட்சிகள் மாறியது. தற்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுக்கு எதிராக திரும்பியுள்ளார். சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை, எக்காலத்திலும் சசிகலாவை கட்சியில் சேர்க்கமாட்டோம் என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ, சசிகலாவை கண்டபடி விமர்சித்து வருகிறார். சசிகலாவால் அதிமுக தொண்டர்கள் பட்ட கஷ்டம் போதும் என கூறியுள்ளார். மேலும் பொதுச்செயலாளர் என சசிகலா கல்வெட்டு திறந்ததை எதிர்த்து காவல்நிலையத்திலும் புகார் அளித்தார்.
இந்நிலையில், சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக கழகத்தின் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இந்த மாறுபட்ட கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே அதிமுக செயல்படுகிறது. அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள், என அவர் கூறினார்.
சசிகலாவுக்கு எதிராக நடவடிக்கையை முன்வைத்து தான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியுடன் இணைந்தார். தற்போது சசிகலாவை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள் என கூறியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசியல் #அதிமுக #ADMK #சசிகலா #தமிழ்நாடு #ஓபிஎஸ் #Sasikala #TamilNaduPolitical #OPS #PanneerSelvam