அன்று ஆஸ்பத்திரியில் உல்லாசம்… இன்று காவலில் குமுறல் அரசு டாக்டர்!!!
கோவில்பட்டி அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து கசமுசா…..புதிதாக ரிலீசான ஆபாச வீடியோவால்….
அகப்பட்ட அரசு டாக்டர் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தவர் குருசாமி வயது 50. இவர் அங்கு பணிபுரியும் இளம் பெண் ஒருவருடன் ஆஸ்பத்திரியில் வைத்தே அப்பெண்ணை கட்டியணைத்து முத்தமிட்டு காம விளையாட்டுக்களில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கோவில்பட்டி சுகாதார பணிகள் துணை இயக்குநர் போஸ்கோ ராஜா விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் அதே அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நீலவேணி என்பவர்… டாக்டர் குருசாமியின் அத்துமீறலை பொறுத்துக்கொள்ள முடியாமல் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் ஆஜராகி புகார் மனு அளித்தார்.
மனுவில் அரசு டாக்டர் குருசாமி பணியில் இருக்கும்போதே தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாகவும், மேலும் தன்னுடன் பணிபுரியும் சில பெண்களிடம் ஆஸ்பத்திரியில் வைத்தே மசாஜ் உள்ளிட்ட காம லீலைகளில் சில்மிஷ விளையாட்டுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை வீடியோ பதிவு செய்த காரணத்துக்காக தன்னுடைய மொபைல் போனை கைப்பற்றி வைத்துள்ளதாகவும் தன்னை தகாத வார்த்தைகளில் பேசி மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் குருசாமி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டாக்டர் குருசாமியின் லீலைகள் பற்றி போலீசார் கூறுகையில், சக பணியாளர்கள் செல்போன் எண்களை எடுத்து அவர்களுக்கு தனியாக மெசேஜ் அனுப்புவதை டாக்டர் குருசாமி வழக்கமாக வைத்து இருந்துள்ளார். குறிப்பிட்ட சில பெண்களின் செல்போன் எண்ணுக்கு அவரது உடை மற்றும் உடல் அமைப்பு குறித்து தகவல்களை முதலில் அனுப்புவார். இதற்கு அந்த பெண்கள் அனுப்பும் பதிலை வைத்து அடுத்தக்கட்ட மெசேஜ்களை அனுப்புவார்.
டாக்டர் குருசாமி மெசேஜ்களுக்கு பெண்கள் ஆட்சேபனை தெரிவித்தால், “சாரி, ராங் போஸ்ட்.
தவறாக அனுப்பி விட்டேன்”என்று தகவல் போட்டுவிட்டு அடுத்த பெண்ணின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுபோன்று தினமும் பல பெண்களுக்கு டாக்டர் குருசாமி மெசேஜ்களை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இன்று ஆபாச வீடியோ வெளியானதால் அகப்பட்டுக் கொண்டார் என்றனர். இதனைத் தொடர்ந்து புகார் அளித்தல் பெயரில் டாக்டர் குருசாமி மேற்கு காவல் நிலையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசுஆரம்பசுகாதாரநிலையம் #அரசுடாக்டர்