மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி!! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது!!!
நாளை மற்றும் வரும் 30ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை நகரில் நாளை (அக்.27) மருது சகோதரர்களின் நினைவு தினம் நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை திருச்சுழி, கரியாப்பட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிவகங்கை செல்லும் பாதையில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள் மூடப்படும்.
மேலும் வருகிற 30ஆம் தேதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி வருகிற 29ஆம் தேதி மாலை 6 மணி முதல் 30ஆம் தேதி முழுவதும் டாஸ்மாக் மது கடைகள், மதுக்கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளையும், தனியார் மது விற்பனை ஸ்தலங்களையும் திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
அதேநேரத்தில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலும் கள்ளச்சந்தையில் பதுக்கிவைத்து மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கலாம் என புகார் எழுந்துள்ளது. இதனால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #டாஸ்மாக் #தமிழ்நாடு #சிவகங்கை #மருதுசகோதரர் #பசும்பொன்முத்துராமலிங்கத்தேவர் #TamilNadu #Sivakangai