செய்திகள்

சென்னைக்கு புதிய மேம்பாலம் !! முதல்வர் திறக்கிறார்!!!

சென்னைக்கு புதிய மேம்பாலம் !! முதல்வர் திறக்கிறார்!!!

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து பேருந்து நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.

ஒரு கிலோ மீட்டர் தூரம் கட்டப்படும் இந்த மேம்பால பணிக்கு ரூ.93.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி 2018 ஜூன் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பணியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மாறாக, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா தொற்று பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட் டது. அதனை தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. புதிய மேம்பால பணிகள் முழுமை அடைந்ததை அடுத்து அதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கோயம்பேடு புதிய மேம்பாலம் வருகிற 1ஆம் தேதி திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை காலையில் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின், பொது மக்கள் பயன்பாட்டிற்கு புதிய மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார். தீபாவளி பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து அதிகரித்துள்ளது. சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் நெரிசல் இல்லாமல் உரிய நேரத்தில் பஸ்கள் செல்ல வசதியாக புதிய மேம்பாலம் தற்போது திறக்கப்படுகிறது.

புதிய மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 1.5 லட்சம் வாகனங்கள் அந்த சாலையை கடக்கின்றன. இந்த பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் 2 சிக்னல் சந்திப்புகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய நிலை ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சென்னை #மேம்பாலம் #தமிழ்நாடு #முதல்வர் #முகஸ்டாலின் #Tamilnadu #Chennai #Bridge #mkstalin #TrafficJam

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button