தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றும், இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கனமழையின் காரணமாக இன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
கனமழையின் காரணமாக இன்று நெல்லை, மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.தொடர் மழையின் காரணமாக இன்று கடலூர், நாகை, விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #பள்ளி #கனமழை #பள்ளிவிடுமுறை #தொடர்மழை #Rain #TNSchool #SchoolHoliday