அட சும்மா கத்தக்கூடாது.. மக்களுக்கு நல்லது பண்ண விடுங்க !! பிரதமர் தாறுமாறு !!!
அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று 11 மணி அளவில் தொடங்கிய கூட்டத்தொடர் தொடக்கத்திலேயே எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்ப பரபரப்பானது. அதில் குறிப்பாக விவசாய சட்டங்களை ரத்து செய்ததன் மீது விவாதம் நடத்த வேண்டும் என்றும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், லக்கிம்பூர் படுகொலை விவகாரத்தில் இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கம் செய்தனர்.
இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பாகவே பிரதமர் மோடி பேசினார்.அப்போது நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இந்த கூட்டத் தொடர் மிகவும் முக்கியமானது. எனவே மக்களுக்கு ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை செய்வதற்கு முனைப்பு காட்ட வேண்டும். நாடாளுமன்றத்தில் அனைவரையும் மதித்து சபை மாண்புகளை மீறாமல் இருக்கவேண்டும்.
அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்கவும், எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கவும் அதற்கு பதில் அளிக்க மத்திய அரசு தயாராக இருக்கின்றது. நாடாளுமன்ற சபை ஒத்தி வைக்கும் அளவுக்கு இடையூறு செய்வதை தயவு கூர்ந்து தவிர்த்து விடுங்கள். நம் நேரத்தை தேவையில்லாமல் வீணடித்து விட்டு எந்த ஒரு ஆக்கபூர்வமான செயல்களை செய்ய விடாமல் தடுக்க வேண்டாம்.
தற்போது ஓமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கு பரவி வருகிறது. இக்கட்டான சூழ்நிலையில் நாம் பல்வேறு விஷயங்களை சிந்தித்து செயல்படுத்த வேண்டி இருக்கின்றது. எனவே அனைவரும் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழையுங்கள் என குறிப்பிட்டு உள்ளார். இதற்கு முன்னதாக கேபினட் அமைச்சர்களான அமைச்சர் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர், ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர் மேலும் இந்த குளிர்கால கூட்டத் தொடரை சுமூகமாக முடிவதற்கும் ஆலோசனை நடத்தினார்.
ஆக மொத்தத்தில் இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், தேவையில்லாமல் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு அவை தள்ளி வைக்க முயற்சி செய்ய வேண்டாம், ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை மக்களுக்காக செய்யலாம் என நேரடியாகவே குறிப்பிட்ட பிரதமர் மோடி.
செய்திகள் : எம்.ஆர்.கிருஷ்ணபிரபு, மதுரை