சென்னை கோயம்பேடு பகுதியில் இயங்கி வரக்கூடிய தனியார் கல்லூரியில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி நிர்வாக அலுவலகத்தை முற்றுகை இட்டனர். பேராசிரியர் பணி நீக்கம் செய்து கல்லூரி உத்தரவிட்டதால் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ். இது குறித்து போலீசார் விசாரணை…
சென்னை கோயம்பேடு பகுதியில் இயங்கிவரும் தூய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கில துறையில் படித்துவரும் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தாக கூறி ஆங்கிலத் துறை பேராசிரியர் தமிழ்ச்செல்வன் என்பவரை கண்டித்து இரண்டாம் ஆண்டு படித்து வரக்கூடிய மாணவய்கள் கல்லூரி நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்…
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும், மாணவி ஒருவருக்கு நேரடியாக அளித்த பாலியல் தொல்லை காரணமாக மாணவ மாணவிகள் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாணவர்களோடு கல்லூரி முதல்வர் தங்கவேல் என்பவர் பேசியும் கேட்கவில்லை. இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக கோயம்பேடு சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் குணசேகர் மற்றும் கோயம்பேடு காவல் ஆய்வாளர் சந்திரசேகர் கோயம்பேடு சரக உதவி ஆணையர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்…
மாணவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கல்லூரி முதல்வர் தங்கவேல் ஆங்கில துறை பேராசிரியர் தமிழ்செல்வனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். முதல்வர் தலைமையில் கமிட்டி அமைத்து பாதிக்கபட்ட நபரை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் அனைவரும் தற்காலிகமாக கலைந்து சென்றனர்…
ஆனால் மாணவர்கள் தரப்பில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு சென்றதாகவும், கல்லூரி நடவடிக்கை திருப்தி அளிக்க வில்லை நாளையும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
செய்திகள் : ஜெயக்குமார், சென்னை.