செய்திகள்

78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

343 பயனாளிகளுக்கு
78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பொள்ளாச்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் 343 பயனாளிகளுக்கு ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்

முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, முதலமைச்சரின் விபத்து நிவாரணத் தொகை, ஈமச்சடங்கு உதவித் தொகை மற்றும் வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை,
தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் 343 பயனாளிகளுக்கு ரூ.
78 லட்சத்து 83 ஆயிரத்து 823 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் சமீபத்தில் பல்வேறு இடங்களிலும் மக்களிடம் குறைகளை கேட்கும் முகாம்கள் நடத்தப்பட்டன.
தமிழக முதல்வரின் உத்தரவுப்படி மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது ஆய்வு நடத்தி அதற்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது பொள்ளாச்சியில் 343 பயனாளிகளுக்கு ரூ. 78 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சியை அடுத்த நவமலை பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடுகள் வேண்டுமென மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதோடு அந்த இடத்தில் மலைவாழ் மக்களுக்கு இலவசமாக வீடுகளும் கட்டிக் கொடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத், திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button