தமிழக ஆளுநர் திடீர் டெல்லி பயணம்!!
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். உள்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் ஆளுநர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.
நாளை, சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்க இருந்த நிலையில், அவசர பயணமாக டெல்லி சென்றுள்ளார்.
நாகலாந்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் நாகலாந்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர்.என். ரவி, ஏற்கனவே நாகலாந்து ஆளுநராக இருந்துள்ளார்.
எனவே, நாகலாந்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க உள்துறை அமைச்சகம் ஆளுநர் ஆர்.என்.ரவியை அழைத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.