திருப்பூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி
திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் அவிநாசியப்பர் நினைவு உடற்பயிற்சி நிலைய வீரர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றனர்.
திருப்பூர் பொங்கு பாளையம் பகுதியில் உலக சிலம்பம் விளையாட்டு கழகம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது. அமைப்பின் மாவட்ட செயலாளர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிக்கு மேற்கு மண்டல துணை பொறுப்பாளர் பிரபு, தலைமை அமைப்புச் செயலாளர் பார்த்திபன், நடுவர் குழு தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட தலைவர் ஈஸ்வரன், துணை தலைவர் தேவா அரசு, தொழில்நுட்ப இயக்குனர் ராமன், சிறப்பு ஆலோசகர் லட்சுமணன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார்.
முன்னதாக மாநில துணைச்செயலாளர் சரவண பாண்டியன் வரவேற்றார்.
உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனர் மற்றும் தலைவர் சிலம்பம் டாக்டர் எஸ். சுதாகரன் சிறப்புரையாற்றினார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது.
ஒற்றை கம்பு வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, சுருள் வாள் வீச்சு, குத்துவரிசை, குழு ஆயுத வீச்சு என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை அவிநாசியப்பர் நினைவு உடற்பயிற்சி நிலையம் வீரர்களும், இரண்டாம் பரிசை திருப்பூர் தென்னாட்டு வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளி வீரர்களும் பெற்றனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.