தள்ளுவண்டியில் உயிரிழந்த நிலையில் 5 வயது சிறுவன் !! யாரு பிள்ளை என்று தேடி அலையும் போலீஸ்!!
விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவர் உள்ளார்.
இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து வீட்டுக்கு சென்ற சிவகுரு இன்று மீண்டும் வந்துள்ளார்.
அப்போது அவர் அங்கு பார்த்த போது தள்ளு வண்டியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது என நினைத்து அக்கம் பக்கத்தினரும் அவர் கூறவே அனைவரும் அந்த சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்தனர்.
ஆனால் சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்து அவர் விழுப்புரம் மேற்கு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை செய்த போது ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழந்தையின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில் அனைவரும் தங்கள் வீட்டு குழந்தை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
யாருடைய குழந்தை, விழுப்புரம் பகுதியை சேர்ந்த குழந்தையா அல்லது யாராவது வெளியே கொலை செய்துவிட்டு கொண்டு வந்து இந்த தள்ளு வண்டியில் குழந்தை உடல் தூக்கி வீசப்பட்டதா என்பது குறித்து விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐந்து வயது ஆண் குழந்தை சடலமாக சாலையோரம் தள்ளுவண்டியில் மீட்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்கள் ஆகியும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர் .