அரசு பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்குப்பதிவு
திருப்பூரில் பள்ளி மாணவனர்களை ஜாதி பெயரைச் சொல்லி திட்டிய விவகாரத்தில் தலைமை ஆசிரியை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக புகார் எழுந்தது. மாணவர்களின் புகாரையடுத்து தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மங்கலம் போலீசார் தலைமை ஆசிரியை கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.