தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த முயன்ற அந்தோணித்துரை என்பவரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்து ரூ.50 லட்சம் மதிப்புள்ள தலா 30 கிலோ எடை கொண்ட 80 பீடி இலை மூட்டைகள் தண்ணீரில் நனையாதவாறு ‘பேக்’ செய்யப்பட்டிருந்தன. மொத்தம் 2.40 டன் எடை கொண்ட இந்த மூட்டைகள் மற்றும் பைபர் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி சுங்கத்துறையிடம் கியூ பிரிவு போலீசார் ஒப்படைத்தனர்.
