சென்னையில் சிலிண்டர் வெடித்து விபத்து!!
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வெல்டிங் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் .
அயப்பாக்கம் பிருந்தாவன் குடியிருப்பு 7 ஆவது மாடியில் வசித்துவரும் , அணுராதா என்பவரது வீட்டில் கடந்த சில நாட்களகவே சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று ஏசி இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்றது.
அதில் அன்சர் அலி, தினேஷ், சதீஷ், அமித், ரியாசுதீன் உள்பட 7 பேர் ஈடுபட்டிருந்தனர். ஒருபுறம் வெல்டிங் வைத்து ஏசி பொருத்தும் பணியையும், மற்றொருபுறம் ஏசி இயந்திரத்தில் கேஸ் நிரப்பும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது எதிர்ப்பாராத விதமாக வெல்டிங் நெருப்பு பட்டு , ஏசி கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த 5 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் படுகாயமடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி தீவிபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீ பற்றிய தளங்களுக்கு, அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தினர்.
மேலும் இந்த விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்