உலக நன்மைக்காக
சாய்பாபா கோவிலில் ஹோமம்
திருப்பூரை அடுத்த அவினாசியில் உள்ள சாய்பாபா கோவிலில் உலக நன்மைக்காக மஹா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள
ஸ்ரீ சாய் பாபா மந்திர் சார்பில் உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும், பெருந்தொற்றிலிருந்து மக்கள் மீண்டு சகஜ வாழ்க்கைக்கு திரும்பவும் மஹா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது. அவிநாசி ஆதீனம் தவத்திரு காமாட்சி சுவாமிகள் தலைமையில் ஹோமம் சிறப்புடன் நடத்தப்பட்டது.
இந்த மகா சண்டி ஹோமத்தில் கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், 64 யோகினி பைரவர் பலிதானம், 13 அத்தியாய ஹோமம், வடு பூஜை, பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் தொடர்ந்து இரண்டு நாட்கள் நடந்தன.
13 விதமான சண்டி ஹோமம் பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர் மாவட்டம்.