செய்திகள்

நள்ளிரவில் தீ விபத்து: 8 வீடுகள் எரிந்து சேதம்

நள்ளிரவில் தீ விபத்து: 8 வீடுகள் எரிந்து சேதம்

வால்பாறையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 வீடுகள் எரிந்து சேதம்.
வால்பாறை அருகில் உள்ள டாடா காபி நிறுவனத்திற்கு சொந்தமான பழைய வால்பாறை எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டம் மற்றும் காபி தோட்டமும் உள்ளது.
இதில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகம் சார்பில் குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பைச் சேர்ந்த 8 தொழிலாளர்கள் குடியிருக்கும் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவு தொழிலாளி ராஜேந்திரன் என்பவரின் வீட்டிலிருந்து கூரை வழியாக புகை வந்துள்ளது.
இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு குடியிருப்புக்குள் இருந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளனர். அதற்குள் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்து அருகில் இருந்த 8 வீடுகளுக்கும் பரவியது. எஸ்டேட் நிர்வாகத்தினர் வால்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்குள் மூன்று வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறி மேலும் தீ பரவி எரிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்களும் எஸ்டேட் தொழிலாளர்களும் தீயை அணைக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். மூன்று மணி நேரம் போராடிய தீயணைப்பு துறையினரும் எஸ்டேட் தொழிலாளர்களும் நள்ளிரவு 2.00 மணியளவில் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டுக்குள்ளிருந்த மின் சாதன பொருட்கள் உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. வால்பாறை போலீஸ்சார் தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் கருப்புசாமி, வால்பாறை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button