செய்திகள்

ஊரடங்கில் சலுகை: ஆனைமலைக்கு மட்டும்

தமிழகத்தில் ஊரடங்கு: ஆனைமலைக்கு சிறப்பு தளர்வு

தமிழகம் முழுவதிலும் ஊரடங்கு அறிவித்த நிலையில் ஆனைமலையில் மட்டும் சிறப்பு தளர்வு அளித்தது போன்று சூழல் நிலவியது.

கொரோனா வைரஸ் தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவத்தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கடும் நடவடிக்கைகளை எடுக்கத்துவங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என அறிவித்தது. இதனையடுத்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரம் மற்றும் கிராமப்புறங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக்காணப்பட்டது.

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் பெட்டிக்கடை முதல் பேக்கரி, மளிகை என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில இடங்களில் மட்டும் உணவகங்கள் செயல்பட்டன. அவற்றிலும் பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட்டன. மருந்து கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. ஆட்டோ, வேன், டெம்போ, பஸ், லாரி என அனைத்து வகை வாகனங்களும் இயக்கப்படவில்லை. பால், காய்கறி ஆகிய அத்யாவசிய தேவைகளுக்கென மட்டும் ஒரு சல வாகனங்கள் இயங்கின.

பொள்ளாச்சி நகரில் எபு்போதும் பரபரப்பாக காணப்படும் காந்தி மார்க்கெட், வெங்காய மார்க்கெட், பழைய இரும்பு கடை பகுதி ஆகியவற்றில் அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் வெறிச்சோடிக்காணப்பட்டது. ஆனைமலை மாசாணியம்மன் கோவில் வளாகம், ஆழியாறு பூங்கா, குரங்கு அருவி ஆகிய பகுதிகளிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

பொள்ளாச்சி சரக காவல் துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தமிழக கேரள எல்லையான ஆனைமலையை அடுத்த மீனாட்சிபுரம், செம்மனாம்பதி ஆகிய இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு ஊரடங்கு உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்காணித்தனர்.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு முறையாக அமல்படுத்தப்பட்ட நிலையிலும், ஆனைமலையில் மட்டும் பல இடங்களில் சகஜ நிலையே நீடித்தது. கார் வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் இயங்காத நிலையில் இருசக்கர வாகனங்கள் பல இடங்களிலும் வழக்கம்போல் இயங்கின. நெல்லுகுத்திப்பாறை, பழைய பஸ் ஸ்டாண்ட், தாலுகா அலுவலகம் எதிரே உள்ளிட்ட பகுதிகளில் கோழி மற்றும் மாடு இறைச்சிக் கடைகள் எவ்வித தடையுமின்றி செயல்பட்டன. அப்பராம்பாளையம் சுங்கம் மற்றும் முக்கோணம் ஆகிய இரு இடங்களில் மட்டும் ஓரிரு போலீசார் பெயரளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button