மாட்டு வண்டியில் மாமூல் சிறப்பு எஸ்.ஐ. உட்பட இருவர் சஸ்பெண்ட்
கேரளா சென்ற மாட்டு வண்டிகளில் மாமூல் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ. உட்பட இருவர் சஸ்பெண்ட்.
பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீன்கரை ரோடு இரட்டைக் கண் பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மதிசேகரன் மற்றும் தலைமை காவலர் சரவணன் ஆகிய இருவரும் அவ்வழியாக வரும் கனரக வாகனங்கள் மற்றும் கேரளாவுக்கு மாடு ஏற்றிச் செல்லும் வாகனங்களின் ஓட்டுநர்களிடமிருந்து லஞ்சமாக பணம் வாங்கியுள்ளார்கள்.
அவ்வழியாக சென்ற சிலர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதனை அறிந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தற்பொழுது சிறப்பு உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.