ரூ. 15 லட்சம் அபேஸ்: போலி ஐ.டி. அதிகாரிகள் 7 பேர் கைது
பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவு அருகே கல்குவாரி உரிமையாளர் வீட்டில் ஐ.டி. அதிகாரிகள் என்று கூறி ரூ 15 லட்சத்தை பறித்துச் சென்ற போலி ஆசாமிகள் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சலிங்கம். கல் குவாரி உரிமையாளரான இவரது வீட்டில் கடந்த 15ம் தேதி மர்ம நபர்கள் நுழைந்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பணம் ரூ. 15 லட்சம், செல்போன் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்றனர். இவர் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இதில் ஐ.டி. அதிகாரிகள் போல் நடித்து பணம் பறித்த பிரவீன் குமார், மணிகண்டன், மோகன்குமார்,
சதீஸ், ராமசாமி, ஆனந்த், தியாகராஜன் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து பணம் ரூ 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இசம்பவத்தில் ஈடுபட்டு
தலைமறைவாக உள்ள மேத்யூ, மகேஸ்வரன், பைசல் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.