நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் – 125வது பிறந்தநாள் விழா.
பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் சார்பில் நேதாஜியின் 125வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நேதாஜியின் உருவப் படத்திற்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகளோடு, நேதாஜியின் வரலாறு புத்தகங்களும் வழங்கப்பட்டன. விழாவில் கோவை உபைத், பேரவை உறுப்பினர்கள் மணிகண்டன், ஹரி கிருஷ்ணன், அமுதன், செந்தில்குமார், விக்கி,
நவீன்குமார், யது கிருஷ்ணன், சூர்யா, சத்தியா,
தினேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். மதியம் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.