தூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஒரு நபர் ஆணையத்தின் 35 வது கட்ட விசாரணை
தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடி சம்பவங்களில் 13 பேர் பலியாகினர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒருநபர் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே 34 கட்டங்களாக விசாரணை நடத்தப்பட்டு ஆயிரத்து 37 பேரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு ஆயிரத்து 483 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஆணையத்தின் 35 வது கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இதில், கலவரத்தின் பொழுது திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. ஆக பணியிலிருந்த கபில்குமார் சரத்கார் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார். தொடர்ந்து தென் மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பிலிருந்த சைலேஷ்குமார் யாதவ் நாளையும், அதைத் தொடர்ந்து வரும் வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரனும் ஆஜராக உள்ளனர். ஆணையத்தின் 35வது கட்ட விசாரணை வருகிற 29ம் தேதி வரை நடக்கிறது.
செய்தியாளர், மாரிராஜா. தூத்துக்குடி.