நாமக்கல் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த 472 முகாம்கள்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 472 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (5ம் தேதி) 21வது கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், அரசு பள்ளிகள் என 442 இடங்கள் மற்றும் 30 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 472 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். இதில் சுமார் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த முகாம் பணிகளில் டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த 20 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 798 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் தேவராஜன்,
நாமக்கல்.