திண்டுக்கல் மாநகராட்சியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சியில் தேர்தல் பார்வையாளர் ஜெசிந்தா இன்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், தேர்தல் பணிக்கு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். கையுறைகள் மற்றும் முகக்கவசங்கள் தயார் நிலையில் வைக்குமாறும், கொரோனா நோயாளிகள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யுமாறும், தேவைப்படும் அனைத்து பகுதிகளிலும் கேமராக்கள் பொருத்துமாறும் தேர்தல் பார்வையாளர் ஜெசிந்தா உத்தரவிட்டார். ஆய்வின்போது கலெக்டர் விசாகன், கண்காணிப்பாளர் வில்லியம் சகாயராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர். கலெக்டர் கூறுகையில், அனைத்து பகுதிகளிலும் வேட்புமனு பரிசீலனை விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு வாபஸ் பெற ஏழாம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாபஸ் நேரம் முடிந்ததும் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றார்.
செய்தியாளர் ரியாஸ்,
திண்டுக்கல்.