5 ஆண்டு சாதனையை
8 மாதத்தில் முடித்தவர் முதல்வர் – ஐ.டி. விங் புகழாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதில் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் களப்பணிக்கென அவரவர் வார்டுகளில் தேர்தல் அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி நகராட்சியின் 13வது வார்டில் தி.மு.க. சார்பில் மணிமாலா போட்டியிடுகிறார். 13வது வார்டில் தேர்தல்
அலுவலக திறப்பு விழா கோவை தெற்கு மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. நகர பொறுப்பாளர் வடுகை
பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.
வேட்பாளர் மணிமாலா அனைவரையும் வரவேற்றார்.
தேர்தல் அலுவலகத்தை மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர்.மகேந்திரன் திறந்து வைத்து பேசுகையில், தமிழக முதல்வர் மக்களின் தேவை அறிந்து செயல்பட்டு வருகிறார். இரவு பகல் பாராது மக்களின் நலனுக்காக மட்டுமே பாடுபடுவதால் அவர், சாதனை முதல்வர் என்ற உச்சத்தை தொட்டுள்ளார். ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை எட்டு மாதங்களில் முடித்த சாதனைக்குரியவர். தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது பங்களிப்பை முழுமையாக அளித்து வருகிறது. இந்த அணியை வலுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தி.மு.க. வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு அளிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு
உறுப்பினர் முத்து, மாநில நெசவாளர்
அணி செயலாளர் குள்ளக்காபாளை
யம் நாகராஜன், ம.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் குகன் மில் செந்தில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாவட்ட செயலாளர் நித்தியானந்தம்,
தலைமை பொதுக்குழு உறுப்பினர் அமுதபாரதி, தகவல் தொழில் நுட்ப அணி தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல் உட்பட பலர் கலந்துகொண்டனர். வட்ட பொறுப்பாளர் பாரூக் நன்றி கூறினார்.