சீரான குடிநீர் வினியோகம் –அ.தி.மு.க. வேட்பாளர் உறுதி.
ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கொடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரித்து வருகிறார்.
பொள்ளாச்சி நகராட்சியின் 30வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் அருணாச்சலம் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் கட்சிப்பணி மட்டுமின்றி தனது வார்டு பகுதி மக்களிடமும் சகஜமாக பழகுபவர்.
வாக்கு சேகரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வரும் அருணாச்சலம் கூறுகையில், இந்த வார்டின் பல. இடங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக. குடிநீர் வினியோகத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவற்றை களைந்து ஒருநாள் விட்டு ஒருநாள் சீரான குடிநீர் கிடைக்க. அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்.
அன்னை கஸ்தூரிபாய் வீதி, கலைவாணர் வீதி மக்களின் நீண்டகால கோரிக்கையான பட்டா மாறுதல் செய்து கொடுக்க முழு முயற்சிகளையும் மேற்கொள்வேன். நகராட்சியின் சுகாதாரத் துறைமூலம் வாரம் ஒரு முறை வார்டுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் துப்புரவு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.
வரி இல்லாத வீடுகளுக்கு வரிவிதிப்பு செய்து, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நிதி பெற்று வீடுகளை புதுப்பிக்க கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன். கடந்த முறை நகராட்சித் தலைவராக எங்கள் கட்சியின் நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைவராக இருந்தபோது இந்த வார்டுகளுக்கு பல்வேறு பணிகளை செய்து கொடுத்தார். அதேபோன்று இந்த வார்டுக்கு மேலும் செய்ய வேண்டிய பணிகளை நான் முன்னின்று செயது கொடுப்பேன் என்று உறுதி கூறி மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.