விசைத்தறியாளர்கள் 5 நாள் உண்ணாவிரத போராட்டம் துவக்கம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காரணம் விசைத்தறியாளர்களின் 5 நாள் உண்ணாவிரத போராட்டம் துவக்கம்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சோமனூர் ரகத்துக்கு 19 சதவீதமும், இதர ரகத்திற்கு 15 சதவீதமும் கூலி உயர்வு கேட்டு திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 44 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசு அறிவித்த கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் வழங்க மறுக்கும் ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்தும், கூலி உயர்வை ஒப்பந்த வடிவில் அமல்படுத்த வலியுறுத்தியும் 5 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
சோமனூர், அவினாசி,தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல்லூர்,
ஆகிய 5 விசைத்தறியாளர்கள் சங்கங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைத்தறியாளர்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் விஜய்,
திருப்பூர்.