குழந்தைகளுக்கு போலியோ
சொட்டு மருந்து முகாம்
தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 60 லட்சம் குழந்தைகள் பயன்பெறும்
வகையில் இன்று போலியோ சொட்டு
மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
இளம் பிள்ளை வாதம் என்ற போலியோ
நோயை ஒழிக்க ஆண்டு தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணைகளில் போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வந்தது.
போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு தவணை சொட்டு மருந்து மட்டுமே போடப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி
நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து
முகாம் கொரோனா தொற்று பரவலால் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இந்த முகாம் மாநிலம் முழுவதிலும் 13 ஆயிரத்து 51 மையங்களில் இன்று நடக்கிறது. 5 வயதுக்கு உட்பட்ட 60 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் முகாமை
முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.