பொள்ளாச்சியில் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து
தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரர் மா.சுப்பிரமணியம் அறிவுரையின் பேரில் போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் இன்று மாநிலம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி பொள்ளாச்சி நகராட்சி சார்பில் 27 மையங்களில் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன் தொடக்க விழா மத்திய பேருந்து நிலையத்தில் நடந்தது. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி நகர் நல அலுவலர் ராம்குமார் தலைமையில் சுகாதார குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் நகர துணைச் செயலாளர் நா.கார்த்திகேயன், முத்தூர் திருவேங்கடம், நகரமன்ற
உறுப்பினர் பாலு, டாக்டர் T.சரவணன், யுவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.