ஸ்மார்ட் சிட்டி முறைகேடு – விசாரணை கமிஷன் அமைத்தது தமிழக அரசு
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு குறித்து விசாரிக்க ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சென்னை, கோவை மதுரை, தஞ்சாவூர், சேலம், வேலுார், திருப்பூர், துாத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி மற்றும் ஈரோடு மாநகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து முறைகேடு குறித்து விசாரிப்பதற்காக ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்துள்ளது. டேவிதார் 3 மாதங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்பிப்பார் எனவும் அரசு அறிவித்துள்ளது.