பொள்ளாச்சி மிராக்கிள் வெல்னஸ் கிளினிக்கில் நோயறிதல் கருவி.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கஸ்தூரிபா சித்த மருத்துவமனையில் நோயறிதல் கருவி மூலம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி டாக்டர். மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் தலைவர் டாக்டர்.எம்.மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கோவை சக்தி குழும நிறுவனங்களின் கீழ்
கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கஸ்தூரிபா சித்த மருத்துவமனை
செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்த நிலையாக, பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் மிராக்கிள் வெல்னஸ் கிளினிக் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கிளினிக்கை குடியரசுத் துணைத்
தலைவர் வெங்கையா நாயுடு தொடங்கி
வைத்தார். மருத்துவ ரீதியாக உடலிலுள்ள
மைட்டோகாண்ட்ரியாவின் செயல்பாடுகளை மேம்படுத்துவதன்
மூலம் இம்மையத்தில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மைட்டோகாண்ட்ரியா என்பது உயிரணுவின் மூலமாகச் செயல்பட்டு மனிதனுக்கு தேவையான அனைத்து ஆற்றலையும் வழங்குகிறது. மனித உடல் நோயினால் பாதிப்படைந்த இந்த மைட்டோகாண்ட்ரியா செயல்படாமல்
போனால், இதய நோய்கள், புற்றுநோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, ஒவ்வாமை போன்ற பல்வேறு நோய்கள் உண்டாகின்றன.
பொதுவாக அலோபதி, ஹோமியோபதி, சித்தா மற்றும் இயற்கை மருத்துவம் என அனைத்தையும் ஒன்றிணைத்து சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்த அனைத்து மருத்துவப் பிரிவுகளிலும்,
தகுதியான மருத்துவர்கள் மிராக்கிள் வெல்னஸ் கிளினிக்கில் சிகிச்சை
அளித்து வருகிறார்கள்.
இந்த கிளினிக்கில் முதலில் மைட்டோகாண்ட்ரியாவின்
செயல்பாட்டில் கவனம் செலுத்தி நோயின் தன்மையை ஆராய்ந்து அறிந்து கொள்கிறோம். பின்னர் அதற்குத் தகுந்தாற்போல் மைட்டோகாண்ட்ரியாவை புத்துயிர்ப்பு அடையச் செய்வதற்குரிய
பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
இதுவரை 2000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
நோயறிதலில் வழக்கமான சோதனைகளை விட மிகவும்
முன்னதாகவே நோய்களின் திறனை மதிப்பிடுவதில் தனித்துவமான
“ஆல்ஃபாசைட்” என்ற புதிய நோயறிதல் கருவியைக் கொண்டு சிகிச்சை மேற்கொள்கிறோம். இது மனித உடலில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் வராமல் தடுக்க உதவுகிறது. இந்த நோய் கண்டு பிடிக்கும் முறை,
உலகளாவிய உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையினால்
அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவிலேயே முதல் முறையாக
தற்போது பொள்ளாச்சியில் பயன்பாட்டுக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“ஆல்ஃபாசைட்” என்ற புதிய நோயறிதல் கருவியைக் கண்டு பிடித்த அமெரிக்க டாக்டர். டேனியல் பெய்லின் மற்றும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பலரும் உடனிருந்தனர்.